வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் இன்று வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.
தனியார் கல்வி நிலையத்தில் மாணவியை இறக்கிவிட்டு திரும்பிய முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews