திருமலை – கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 26 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் 26 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் , படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews