பாதாளக்குழு உறுப்பினரான அபா என்றழைக்கப்படும் துலான் சமீர சம்பத், விசேட அதிரடி படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
மொறட்டுவ − எகொடவுயன பகுதியில் வைத்தே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிழல் உலக தாதாவை கைது செய்வதற்காக படையினர் சென்றவேளை, சந்தேகநபர், விசேட அதிரடிபடையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் விசேட அதிரடிபடை அதிகாரியொருவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சுற்றி வளைப்பில் மேலும் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#SriLankaNews