e9d0acb1 21ac8fdb us vs iran
செய்திகள்உலகம்

ஈரான் மீது புதிய ஓர் பொருளாதாரத் தடை!!

Share

ஈரான் மீது அமெரிக்கா புதிய ஓர் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

ஈரானிய இராணுவம் மீது அமெரிக்கக் கருவூலத்துறை புதிதாக மீண்டும் ஓர் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில், “சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது 2019ஆம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் இராணுவம் நடத்தியது.

2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும் ஈரான் இராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரானின் ட்ரோன்கள், ஹமாஸ், ஹவுத்தி போன்ற கிளர்ச்சியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே தான் ஈரான் இராணுவ ட்ரோன் பிரிவின் மீதும், ஈரான் இராணுவத்தின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவர் அகாஜானி மீதும் புதிதாகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் புதிய பொருளாதாரத் தடையால் ஈரான் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...