உயர்தர பரீட்சை – விண்ணப்ப காலம் நீடிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நாளையுடன் முடிவடையவிருந்தது. இந்தநிலையில் குறித்த விண்ணப்பகாலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version