உயர்தரப் பரீட்சை ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம்: புதிய கால அட்டவணையை வெளியிட்டது பரீட்சைத் திணைக்களம்!

download

சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் ஜனவரி 12-ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இது குறித்துத் தெரிவிக்கையில். மீதமுள்ள பரீட்சைகள் ஜனவரி 12 முதல் ஜனவரி 20-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும். பரீட்சை பணிகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்காகப் பரீட்சைத் திணைக்களம் பின்வரும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது:

பணிகளை ஒருங்கிணைக்க 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்கள் (Coordinating Centres) செயற்படும். விடைத்தாள்களைச் சேகரிப்பதற்காக 32 பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் சிக்கல்கள் இருப்பின், அது குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version