COVID – யாழில் 9 பேர் உயிரிழப்பு!
கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் இன்று (24) மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை யாழில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே அதிக தொகையாகும்.
உயிரிழந்தோரில், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேரும், கொடிகாமத்தில் இருவரும், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும், வவுனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும், கொக்குவிலைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொடிகாமத்தைச் சேர்ந்த 80 மற்றும் 70 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 24 வயது இளைஞனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.