கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் பங்கேற்பதற்காக 80 இந்திய யாத்திரிகர்களை ஏற்றிய 4 படகுகள் இராமேஸ்வரம் துறைமுகத்தில் பொலிஸாரின் தீவிர சோதனையின் பின் வந்தடைந்தன.
கச்சதீவு திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த 70 யாத்திரிகர்களும், 10 மதகுருமார்களுமாக மொத்தம் 80 பேர் வருகை தந்துள்ளனர்.
இதேநேரம் இந்திய யாத்திரிகர்கள் 50 பேர் மட்டும் பங்கேற்க கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இறுதி நேரமே 100 பேருக்கான அனுமதி கிட்டிய காரணத்தால் 100 பேர் வர முடியவில்லை எனத் தமிழக யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.
#India