சஹ்ரானுடன் தொடர்புடையவர் 8 பேருடன் கைது!

jail arrested arrest prison crime police lock up police station shut

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் படங்களை வைத்திருந்த ஒருவரும், அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 8 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் , கண்டி, அக்குறணையில் இருந்து, காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனமொன்றை இராணுவத்தினர் சோதனையிட்டனர்.

இதன்போதே, முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது, சஹ்ரான் ஹாசீமின், படங்களும் தொலைபேசியில் இருந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வாகனத்தில் பயணித்த 9 பேரையும் கைது செய்துள்ளதுடன், விசாரணைக்காக அவர்கள் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version