பசுவின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக்!

cow

நோய்வாய்ப்பட்ட பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட கழிவுகளை அகற்றியுள்ளனர்.

ஆனந்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில், மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது எனக் கூறப்படுகிறது..

#IndiaNews

Exit mobile version