MediaFile 3 3 1
செய்திகள்இந்தியா

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களுக்குப் பிப்ரவரி 3 வரை விளக்கமறியல்!

Share

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (20) யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப்படகுகள் மற்றும் பெருமளவிலான மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று (21) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த நீதவான், அவர்களைப் பிப்ரவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...