mental health2 4b39720bf5
செய்திகள்இலங்கை

7-ல் ஒருவருக்கு மனநல பாதிப்பு: இலங்கையின் தேசிய மனநல மருத்துவமனை புதிய அறிவிப்பு!

Share

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, உலகில் ஒவ்வொரு ஏழு நபர்களில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையான மனநலப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தேசிய மனநல மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தேசிய மனநல மருத்துவமனை (National Institute of Mental Health – NIMH) அண்மையில் 100 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் 50,000-க்கும் அதிகமான நோயாளர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளொன்றுக்குச் சுமார் 600 நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்படுகின்றன.

பணிப்புறக்கணிப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் போன்ற சூழல்களிலும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனை சேவைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன.

இன்றைய இளைஞர்கள் தங்களது மனநலப் பிரச்சினைகளைப் பிறரிடம் நேரடியாகப் பேசத் தயங்குவதை உணர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிறர் கேட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருப்பவர்கள், இனி தமது பிரச்சினைகளை வட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பித் தீர்வு பெறலாம்.

அவசரத் தேவைகளுக்காகவும் ஆலோசனைகளுக்காகவும் 1926 என்ற துரித தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் பயன்பாட்டில் உள்ளது.

எவ்வித முன்னறிவிப்புமின்றி எவரும் எந்நேரத்திலும் ஆலோசனைகளுக்காக மருத்துவமனைக்கு நேரில் வரலாம் என மருத்துவர் தம்மிக அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...