ஐஎஸ் தீவிரவாதிகள் 600 பேரை தாம் 3 மாதத்திற்குள் கைது செய்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள்.
ஆப்கான் விட்டு அமெரிக்க சென்ற பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள் .
அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி ஐஎஸ் தீவிரவாதிகள் தலிபான்களுக்கு சவால் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் மசூதிகளில் தாக்குதல், காபூல் மருத்துவமனையில் தாக்குதல் என ஆப்கானின் அமைதிக்கு குழப்பம் விளைவித்தார்கள்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் 600 பேரை தாம் கைது செய்யததாக தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் தலிபான்கள் தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளதாக சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment