யாழில் மேலும் ஆறு பேர் கொவிட்டால் சாவு!!

2021 08 06T051229Z 1812498661 RC2HZO9KAI2L RTRMADP 3 HEALTH CORONAVIRUS SRI LANKA

A medical official carries a body of a suspected coronavirus disease (COVID-19) victim from a freezer storage inside a container to a trolley at the Judicial Medical Officer's premises in Colombo, Sri Lanka, August 6, 2021. REUTERS/Dinuka Liyanawatte

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவரும், காரைநகரைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவரும், யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயது ஆண் ஒருவரும், அரியாலையைச் சேர்ந்த 81 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version