இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதியில் காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான வினோதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வினோதாவின் கணவரான பாரத் தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து வினோதாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வினோதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த வினோதாவின் பெற்றோர் பாரத் அவருடைய தாய் மற்றும் சகோதரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், பாரத் மற்றும் அவருடைய தாய் ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
Leave a comment