6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு

KANJAA

6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரிவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கஞ்சா பயிர்ச்செய்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும், சந்தேக நபர் விரைவில் கைதுசெய்யப்படுவார் எனவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version