முகமாலையில் ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி!

MediaFile 2 8

யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ‘யாழ் தேவி’ ரயிலுடன், ரயில் வழித்தடத்திலுள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version