இலங்கை தினந்தோறும் 5000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது.
இவ்வாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது என உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி தெரிய வந்துள்ளது.
அதன்படி எம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதமானவை வீணடிக்கப்படுகின்றது.
அதற்கமைய சுமார் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட சமைக்கப்படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகின்றது.
இன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் இந்த நிலைமையானது நாட்டுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.