செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

Share

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ஆகிய இரு தரப்பினரையும் சமமாகப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டம், வாடகைக்கு இருப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமானச் சாதகங்களை வழங்குவதாகக் கருதப்பட்டது. இதனால், உரிமையாளர்கள் தமது வீடுகளை வாடகைக்கு விடத் தயக்கம் காட்டியதுடன், இது வீட்டுச் சந்தையில் தேக்கநிலையை உருவாக்கியிருந்தது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, புதிய சட்டத்தின் சில முக்கிய அம்சங்களை விளக்கினார். வாடகை செலுத்தத் தவறினாலும் அல்லது ஒப்பந்தம் மீறப்பட்டாலும், முறையான நீதிமன்ற உத்தரவின்றி எவரையும் வெளியேற்ற முடியாது.

வாடகைதாரரை வெளியேற்றும் நோக்கில் மின்சாரம் அல்லது நீர் விநியோகத்தைத் துண்டிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் இச்சட்டமூலம் குறித்துச் சில கரிசனைகளை வெளியிட்டுள்ளனர். வாடகை செலுத்தாதவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாமல் போனால், அது உரிமையாளர்களுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், இது வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி வாடகை உயரக் காரணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் இன்று (பெப். 03) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது ஆலோசனைகள் அல்லது ஆட்சேபனைகளை நீதி அமைச்சுக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...