5% வரி அரசின் நிலைப்பாடு அல்ல! – கூறுகிறார் டலஸ்

dulles 700x375 1

மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்பது அரசின் கருத்து அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவிக்கையில்,

வரி விதிப்பு தொடர்பான திட்டம் அமைச்சரவையிலோ அல்லது வாய்மொழியாகவோ பேசப்படவில்லை. இக் கருத்து பந்துல குணவர்த்தனவின் தனிப்பட்ட கருத்தே.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு பல்வேறு இடங்களில் தட்டுப்பாடு உள்ளது என தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு இயல்புநிலைக்கு திரும்பும் – என்றார்.

 

Exit mobile version