யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவர் உட்பட ஐந்து பேர் இன்று கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நல்லூரைச் சேர்ந்த 69 வயதுப் பெண் ஒருவரும், நெல்லியடியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும், சுன்னாகத்தைச் சேர்ந்த 76 வயது ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, மந்திகை மருத்துவமனையில் இன்று காலை சேர்க்கப்பட்ட 22 வயதுப் பெண் உட்பட இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிந்தனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment