வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கோவிலுக்கு வர்த்தகர் ஒருவரால் வழங்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயமாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் பிரபல வியாபாரி ஒருவராலேயே குறித்த மாணிக்கக்கல், கோவிலுக்கு பூஜை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கதிர்காமம் கோவிலுக்கு பாதாள குழு உறுப்பினர் அங்காட லொக்கா தரப்பால் வழங்கப்பட்டிருந்த 38 பவுண், தங்க தகடொன்றும் அண்மையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அங்கொட லொக்காவின் மனைவி சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். எந்த நோக்கத்துக்காக இது வழங்கப்பட்டது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews