சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 40 ஆயிரத்து 333 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
15 வீடுகள் முழுமையாகவும், 97 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
47 ஆயிரத்து 710 பேர் உறவினர்களின் வீடுகளிலும், 10 ஆயிரத்து 857 பேர் 58 பாதுகாப்பு நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்துக்கு அடுத்தப்படியாக யாழ் மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன. சீரற்ற காலநிலையால் இதுவரை 34 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews