நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மின்வெட்டு தொடர்பில் கோரிக்கை முன்வைத்திருந்தது. குறித்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கு அமைய காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஏ,பி மற்றும் சி வலயங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டும் ஏனைய வலயங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டும் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews