விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த பண்டிதரின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதரின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது பண்டிதரின் உருவப் படத்திற்கு மாலை சூட்டப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பண்டிதரின் தாயாருடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#SriLankaNews