இலங்கையில் ஒரு நாளைக்கு 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இவ்வாண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 10,713 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் 5 வயதுக்கு குறைவான சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகள் 1,632 உம், 6 தொடக்கம் 10 வயதிற்குட்பட்ட முறைபாடுகள் 2,626 உம் அடங்குகின்றன.
முறைபாடுகள் கிடைக்கப்பெறாத சம்பவங்கள் இதை விட அதிகமாக இடம்பெறலாம் என டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment