அரிசியின் விலை ஒரு கிலோ 300 ரூபாவாக அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாட்டில் நிலவும் உர நெருக்கடியை இதற்கு காரணம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நெற்பயிர்களுக்கு தகுந்த நேரத்தில் உரங்கள் கிடைக்கப்பெறாமையால், அவை மஞ்சள் நிறமாக மாற்றமடைந்து வருகின்றன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews