திக்வெல்ல – பெலியத்த வீதியில் பேருந்து – டிப்பர் பயங்கர மோதல்: 30 பேர் காயம்!

1572954337 Bus tipper collision in Kuda Oya injures 30 B

திக்வெல்ல – பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

வீரக்கெட்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பெலியத்த பொலிஸார், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Exit mobile version