24 மணி நேரத்தில் 286 தொற்றாளர்கள்! – அபாய கட்டத்தில் யாழ்ப்பாணம்!!

india exempts oxygen concentrator imports from customs clearance testing kits from duty

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவர்களில் 16 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 85 பேரும் யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேரும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் 9 பேரும் நல்லூரில் 14 பேரும் சண்டிலிப்பாயில் 8 பேரும் உடுவிலில் 11 பேரும் தெல்லிப்பழையில் 2 பேரும் பருத்தித்துறையில் 28 பேரும் மருதங்கேணியில் 4 பேரும் ஊர்காவற்றுறையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Exit mobile version