நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் (Severe Floods) இடம்பெயர்ந்து சிக்கித் தவித்த 21 வெளிநாட்டவர்கள், நேற்று (டிசம்பர் 1) இலங்கை விமானப்படையின் (Sri Lanka Air Force – SLAF) துரித மீட்புக் குழுவினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அனுராதபுரம் விமானப்படை தளத்தைச் சேர்ந்த 06 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் MI-17 ஹெலிகொப்டர் மூலம் இந்த மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு (Katunayake Air Force Base) அழைத்துவரப்பட்டனர்.
அனர்த்தத்தின் போது, இலங்கை விமானப்படையின் இந்த விரைவான நடவடிக்கையானது வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.