இந்தியா
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் மஹேல ஜெயவர்தன
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் மஹேல ஜெயவர்தன
மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2017 – 2022வரை மஹேல ஜெயவர்த்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார்.
எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த பதவியில் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனவுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டில், ஜெயவர்த்தன கிரிக்கெட்டின் உலகளாவிய தலைவரானதுடன் பல்வேறு லீக்குகளில் MIஇன் உலகளாவிய அணிகளின் விரிவாக்கத்தை நிர்வகித்தார்.
இந்நிலையில், மஹேலவின் நியமனத்தை அறிவித்த பின், மும்பை இந்தியன்ஸ் (MI) உரிமையாளரான ஆகாஷ் அம்பானி, “மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளராக மஹேல மீண்டும் வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் உலகளாவிய அணிகள் எங்கள் சுற்றுச்சூழலுக்குள் அவரின் காலடிகளைக் கண்டறிந்துள்ளதால், அவரை மீண்டும் MIக்கு அழைத்து வந்துள்ளது” என வாழ்த்தியுள்ளார்.
அதேவேளை, மார்க் பவுச்சரை சுட்டிக்காட்டி ”உங்கள் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி” என மும்பை இந்தியன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.