24 6666a311c414a
இந்தியாசெய்திகள்

ஒரு ஓடுபாதையில் இரு விமானங்கள் : மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

Share

ஒரு ஓடுபாதையில் இரு விமானங்கள் : மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து ஒரு விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மற்றுமொரு விமானம் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானம் தரையிறங்கியது.

ஒரே ஓடுபாதையில் இரு விமானங்களும் சிறிது இடைவெளியில் இயங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்ததை தொடர்ந்தே ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கியதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்படியே, ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்டதாக, ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த போது பணியில் இருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை,சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
03 15
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு: இந்தியா டுடே கான்க்ளேவில் நாமல் ராஜபக்ஷவின் முக்கிய உரை!

புது தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில்...

02 14
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை: அமெரிக்க போர் விமானங்களின் பயணங்களுக்குத் தடை!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வான்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்க...

01 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் மீண்டும் QR முறை: இன்று முதல் அமுல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக்...

25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...