இந்தியா
உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி
உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்ற சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சீமான் சென்னையில் தனது தொண்டர்களுடன் கிருஷ்ன ஜெயந்தி விழாவை கொண்டாடினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்,”உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசியது தவறில்லை. அவர் பேசிய கருத்துடன் தான் மோத வேண்டும். அது தான் ஜனநாயகம். அதை விட்டு, தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. அவர், எறிந்த பந்தை வைத்து பாஜக விளையாடுகிறார்கள்” என்றார்.
மேலும் அவர், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்று சொன்ன சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல, கசாப்புக்கடைக்காரர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய சீமான், “மனித பிறப்பில் பாகுபாடு பார்ப்பவர்களை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில், சனாதனத்தை எதிர்க்கிறேன். டெங்கு நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்காமல் இருப்பது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.