சீமான் என்னை திருமணம் செய்தது உண்மை! அவரை கைது செய்யுங்கள்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்ததாக முன்னர் பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பினார்.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும். அவர் என்னை திருமணம் செய்தது உண்மைதான். அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
Comments are closed.