அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விலைவாசி உயர்வு மக்களை அச்சுறுத்துவதால் ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தக்காளியின் திடீர் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். அதில் இருந்து மீள்வதற்குள் தற்போது பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமே இந்த விலைவாசி உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதனை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிபோடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
1 Comment