“இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும்.”
– இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் தற்போது மருந்துப் பொருட்கள் இன்றி ஏற்படுகின்ற ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நிதி அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த போதிலும் தொடர்ந்தும் ரூபாவின் பெறுமதி ஒரே அளவில் காணப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வங்கிகளுக்கு டொலர் அனுப்புவதைத் தவிர்த்தனர்” – என்றார்.
#SriLankaNews