ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை! – கலகத் தடுப்பில் பொலிஸ்

sajith 3

அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று மாலை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் கலகத் தடுப்புப் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையிலேயே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலிமுகத்திடல் பகுதி இன்று மாலை முழுமையாக முடக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடினர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியின் நிறைவில் பதாதைகள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டுக் கொளுத்திமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version