721151
செய்திகள்இந்தியா

டிகேஎம் 9 அரிசி இனி கொள்முதல் செய்யப்படாது!!

Share

டிகேஎம் அரிசி கொள்முதல் தொடர்பில் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம்9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வகை நெல்லினை அறுவடை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இவ்வகை அரிசியினை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் வாங்க விரும்புவதில்லை.

இந்நிலையில், டிகேஎம்9 ரக அரிசியினை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விரும்பாத நிலையில் விநியோகிப்பதைத் தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் 2022-2023 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக டிகேஎம்9 ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் பிற சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...