1 6
செய்திகள்அரசியல்இலங்கை

அலையெனத் திரண்ட மக்கள்! முடக்கப்பட்டது கொழும்பு நகர்!!

Share

அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றது. கொழும்பை முற்றுகையிட்டு இந்தப் போராட்டம் பிற்பகல் 3 மணி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான மக்கள் கொழும்பு நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

அதன்படி வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் நமக்கு திசைகளில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும் கொழும்பில் களமிறங்கியுள்ளனர்.

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்துக்கு அருகிலிருந்தும் என இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவும் மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.

பேரணியில் மக்கள் சவப்பெட்டியைச் சுமந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்தப் பேரணியில் சிலர் கலந்துகொண்டுள்ளனர்.

பஸில் போன்று வேடமிட்டவர்கள், “என்னால் நாட்டைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது; மன்னித்து விடுங்கள்” என ஒப்பாரியுடன் கூறிக்கொண்டு பேரணியில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...

MediaFile 15
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு IMF-இன் அவசரகால நிதியுதவி: $206 மில்லியன் நிதிக்கு நிறைவேற்று சபை ஒப்புதல்!

இலங்கைக்கு அவசரகால நிதி உதவியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை (Executive...

parliament of sri lanka 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடர் மீட்பு: ரூ.500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்!

‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக...