மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இந்த நாட்டை நல்நிலைப்படுத்தவே நாம் வந்துள்ளோம். அதனாலேயே நான் ஊடகவியலாளர்களிடம் கேட்கிறேன், நீங்களும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகளின் பங்காளர்களாக மாறுங்கள். அதனை விடுத்து.
விமர்சனங்கள் செய்து மக்களை அதைரியமூட்ட வேண்டாம். நீங்கள் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும். முடிவுக்கு கொண்டுவரவே முடியாது என கூறப்பட்ட போரினை நாம் முடிவிற்கு கொண்டுவந்தோம்.
அதேவிதமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என அரசின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்
#srilankanews
1 Comment