மானிப்பாய் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள பகுதியில் வீதி அகலிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று ஆதரவாளர்களுடன் குறித்த பகுதியை அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டார்.
முன்னரே திட்டமிட்டு அறிவித்ததன்படி நண்பகல் 12.00 குறித்த இடத்திற்கு அவர் வருகைத் தந்திருந்தார்.
அதன்போது அங்கஜன் குறித்த வீதி அகலிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோர் என தெரிவித்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களும் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
1 Comment