புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கடன் சுமைகளால் மன உளைச்சலுகுள்ளாகி சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அவர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறு கைத்தொழில் அல்லது வங்கிக் கடன் ஊவா தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
கடன் சுமைகளால் மன உளைச்சலுகுள்ளாகி சிலர் தற்கொலை செய்தும் கொண்டுள்ளனர். பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.
உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.என தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment