மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கச்சேனை பகுதியிலுள்ள ஆலயமொன்றின் மடத்திலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட முறுகல் நிலையினால், கோயிலில் உறங்கச் செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நபரே ஆலய மடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்துறையை சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைகள் இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment