baby shower
செய்திகள்இந்தியா

கர்ப்பிணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய பொலிஸ் அதிகாரி!

Share

மதுரையில் கர்ப்பிணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பொலிஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தனது வீட்டில் டாபர்மேன் வகையைச் சேர்ந்த பெண் நாயை வளர்த்து வருகிறார். குடும்பத்தில் ஒருவராக உள்ள அந்த நாயை பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

சுஜி என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய் கர்ப்பமான நிலையில் அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.

தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வழங்கும் 5 வகையான கலவை சாதம் நாய்க்கு பரிமாறப்பட்டது. அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...