பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.
இன்று கூடிய பாராளுமன்றத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் சபைக்குள்ளும், வெளியேயும் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
#SriLankaNews