செய்திகள்
ஒமிக்ரோன் தொடர்பான புதிய தகவல்!!


டெல்டா வைரஸைவிட ஒமிக்ரோன் தீவிரம் குறைந்தது என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி சி.என்.என் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும் ஒமிக்ரோன் பரவி தற்போது 3 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவிட்டது.ஆனால், ஆபத்தான டெல்டா வைரஸைவிட, ஒமிக்ரோன் வைரஸால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது .
ஒமிக்ரோன் வைரஸ் குறித்தும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன.
ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா வைரஸின் தீவிரத்தைவிட, ஒமிக்ரோன் தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது.