செய்திகள்
கிண்ணியா படகு விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!
கிண்ணியா படகு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததையடுத்து படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி திருகோணமலை கிண்ணியாவில் இடம்பெற்ற கோரமான அனர்த்தத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் படுகாயமடைந்தனர்.
பயணிகள் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் படகு உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login