இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஷாந்த ரத்னவீர குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நிறுவன ரீதியிலான விடயங்களை அடிப்படையாக வைத்து இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஷாந்த ரத்னவீரவிடம் வினவியபோது, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூறினார்.
Leave a comment