செய்திகள்
ஒமிக்ரோன் வைரஸால் இதுவரை உயிரிழப்புக்கள் இல்லை!!
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமிக்ரோன் 38 நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா எதிர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் குறிப்பிடுகையில், ஒமிக்ரோன் 38 நாடுகளுக்கும், 6 மண்டலங்களுக்கும் பரவிவிட்டது..
தென் ஆப்பிரி்க்காவில் இப்போதுதான் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்து வருகிறது.
இனிவரும் காலங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது இருப்பினும் இன்னும் டெல்டா வகை வைரஸ்தான் வீரியம் மிகுந்ததாக இருக்கிறது. சார்ஸ்கோவிட்டை விட ஒமிக்ரோன் வித்தியாசமானது வேறுபட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
#WorldNews
You must be logged in to post a comment Login