செய்திகள்உலகம்

பிரேசிலில் பதிவாகியுள்ள ஒமைக்ரோன் வைரஸ்!!

Share

லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக ஒமைக்ரோன்   தொற்று உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன்   வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

குறித்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாவ் பாவ்லோவுக்கு தனது மனைவியுடன் வந்த நபரொருவருக்கே  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணவர், மனைவி இருவருக்குமே ஒமைக்ரான் வகை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்குள் ஒமைக்ரோன்  போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒமைக்ரோன்   உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...